இறால் வறுவல்

தேவையான பொருட்கள்

இறால் - அரை கிலோ
பெ. வெங்காயம் - அரை கிலோ
மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
மி. பொடி - இரண்டு டீஸ்பூன்
இஞ்சி + பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
ரீபைன்டு ஆயில் - மூன்று டேபிள்ஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி+ பூண்டு விழுது, உப்பு தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி சோம்பு தாளித்து ஊற வைத்த இறாலை போட்டு வதக்க வேண்டும்.
அதுவே தானாக நீர்விட்டுக்கொள்ளும். எனவே நீர் ஊற்ற வேண்டாம்.
நீர் முழுவதும் வ்ற்றியதும் வெங்காயத்தை நீள நீளமாக அரிந்து இறாலில் போடவும்.
சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.


பரிமாறும் அளவு - ஐந்து நபர்களுக்கு
ஆயத்த நேரம் - இருபது நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்

நண்டு குருமா

தேவையான பொருட்கள்

நண்டு - ஒரு கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - இரண்டரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
அரைக்க:
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - ஒரு டீ ஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டீ ஸ்பூன்
மல்லி பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் - ஐந்து டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து இரண்டு துண்டுகளாக நடுவில் நறுக்கவும்.
அடுப்பில் வானலியை வைத்து அரை டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி அரைக்க வைத்துள்ளவற்றில் மிளகு, சீரகம், சோம்பு போட்டு வாசம் வர வறுத்து அடுப்பை சிம்மில் வைத்து பின் மல்லி பொடி, மிளகாய் பொடி சேர்த்து பிரட்டவும்.
தேங்காயை கடைசியாக போட்டு லேசாக வெதுப்பினால் போதும்.
இறக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி & பூண்டு விழுது சேர்க்கவும்.
வாசனை வந்ததும் தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் நண்டைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த விழுதை ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

பரிமாறும் அளவு - நான்கு நபர்களுக்கு
ஆயத்த நேரம் - பதினைந்து நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்

இறால் குழம்பு

தேவையான பொருட்கள்

இறால் - அரை கிலோ
சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
உப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன்
எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - மூன்று கொத்து
தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டீ ஸ்பூன்

செய்முறை
இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.
தேங்காய் & சீரகத்தை அரைக்கவும்.
சோம்பை நன்றாக தட்டி வைக்கவும்.
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்கவும்.
இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளியை ஊற்றவும்.
ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

பரிமாறும் அளவு - ஆறு நபர்களுக்கு
ஆயத்த நேரம் - இருபது நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்

நெய்மீன் வறுவல்

தேவையான பொருட்கள்

நெய்மீன் - அரை கிலோ
மிளகாய் பொடி - இரண்டு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
பூண்டு - இரண்டு பல்
சி. வெங்காயம் - ஒன்று
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - முன்று கொத்து
எண்ணை - வறுக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் மீனை சுத்தம் செய்து அகலமான மெல்லிய துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
மி.பொடி, ம.பொடி, உப்பு, சோம்பு, சி.வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதைப் போட்டு மீன் துண்டங்களில் பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையை பரவலாகப் போட்டு அதன் மேலேயே மீன் துண்டங்களைப் பரப்பவும்.
இரண்டு பக்கமும் நன்கு சிவந்ததும் வெளியில் எடுத்து எண்ணை உறிஞ்சும் தாளில் சுற்றி தட்டில் எடுத்து வைக்கவும்.


பரிமாறும் அளவு - நான்கு நபர்களுக்கு
ஆயத்த நேரம் - பத்து நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - பத்து நிமிடங்கள்

வஞ்சிர மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

வஞ்சிர மீன் - முக்கால் கிலோ
சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
தக்காளி - இரண்டு
ப. மிளகாய் - ஐந்து
புளி - பெரிய எலுமிச்சையளவு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
சீரகம் - கால் டீ ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணை - நான்கு டேபிள் ஸ்பூன்
உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
அரைக்க:
வர மிளகாய் - ஏழு
மல்லி விதை - ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்

செய்முறை

முதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டங்களாக நறுக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்கவும்.
வர மிளகாய், மல்லி, சோம்பு மூன்றையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நைஸான விழுதாக அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தில் இரண்டை எடுத்து வைத்து விட்டு மற்றதை தோலுறித்து இரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்கவும்.
ப. மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். தனியாக பிளக்க வேண்டாம்.
புளியை மூன்று டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரைத்த விழுதையும் போட்டு கரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து வெந்தயம் போட்டு வாசனை வந்ததும் வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு மூன்று நிமிடம் வதக்கவும்.
பின் தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.
இப்போது புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
பின் மீன் துண்டங்களைப் போட்டு (மீனை போட்டவுடன் குழம்பு லேசாக நீர்த்துக் கொள்ளும்) ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சீரகத்தை நன்றாகத் தட்டி பிறகு இரண்டு வெங்காயத்தையும் வைத்து லேசாகத் தட்டி குழம்பில் போட்டு மூடி பத்து நிமிடம் கழித்து திறந்து லேசாக (மீன் உடைந்து விடாமல் கவனமாக) கிண்டி விடவும்.

பரிமாறும் அளவு - ஐந்து நபர்களுக்கு
ஆயத்த நேரம் - பத்து நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - முப்பது நிமிடங்கள்

தயிர் வடை

தேவையான பொருட்கள் :

உளுந்து - கால் கிலோ
ப. அரிசி - ஐம்பது கிராம்
தயிர் - அரை லிட்டர்
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - அரை டீ ஸ்பூன்
ப. மிளகாய் - ஐந்து
மிளகு - பத்து
சீரகம் - அரை டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - நான்கு கொத்து
கொத்த மல்லி - மூன்று டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - ஒரு டீ ஸ்பூன்
உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
எண்ணெய் - அரை லிட்டர்

செய்முறை :

முதலில் உளுந்தையும், அரிசியையும் இருபது நிமிடம் ஊற வைக்கவும்.
தயிரை நன்றாக கடைந்து ஒரு ஸ்பூன் உப்பு, அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
ப. மிளகாய்களை சிறிதாக வெட்டி வைக்கவும்.
ஒரு ஸ்பூன் எண்ணையில் கடுகு & உளுந்து தாளித்து, பாதி மிளகாய், இரண்டு கொத்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் அடுப்பை அனைத்து விட்டு தயிரை ஊற்றி மூடி வைக்கவும்.
உளுந்து, அரிசியை கிரண்டரில் போட்டு அரைக்கவும். மாவு நன்றாக பொங்கி வந்ததும் உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வழிக்கவும்.
மாவில் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்துப் போடவும்.
மீதமுள்ள ப. மிளகாய்,கறிவேப்பிலை போடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊறி சூடாக்கவும். அடுப்பு மிதமான தீயில் எரிய வேண்டும்.
வடைகளை தட்டி போட்டு வெந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.
பிறகு வடைகளை தயிரில் போட்டு மல்லி இலைகளையும், சீரகப் பொடியும் தூவவும்.


குறிப்பு :
விருப்பமுள்ளவர்கள் பத்து சி. வெங்காயத்தை நறுக்கி மாவில் சேர்த்து வடைகளாக தட்டலாம்.

பரிமாறும் அளவு : எட்டு நபர்களுக்கு
ஆயத்த நேரம் : முப்பது நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : இருபது நிமிடங்கள்

சேமியா தயிர் கிச்சடி

தேவையான பொருட்கள் :

சேமியா - கால் கிலோ
தயிர் - அரை லிட்டர்
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
க. பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - கால் டீ ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - பத்து கிராம்
வெங்காயம் - ஒன்று
ப. மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
மல்லி இலை (நறுக்கியது) - இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
முந்திரியை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.
அரை லிட்டர் தண்ணிரை கொதிக்க வைத்து சேமியாவை போட்டு மூன்று நிமிடம் வேக வைத்து இறக்கி நீரை வடிக்கவும். மேலே இரண்டு டம்ளர் குளிந்த நீரை ஊற்றி வடிய விடவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் லேசாக பிறட்டிக் கொடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, க. பருப்பு, முந்திரி தாளித்து பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சேமியா, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கிண்டி அடுப்பை அணைக்கவும்.
பின் தயிர் சேர்த்து கிண்டி விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றி மேலே மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.


பரிமாறும் அளவு : நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம் :ஐந்து நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : பதினைந்து நிமிடங்கள்

காரட் தயிர் பச்சடி

தேவையான பொருட்கள்

காரட் - நான்கு
ப. மிளகாய் - மூன்று
பெ. வெங்காயம் - ஒன்று
கடுகு - சிறிது
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீ ஸ்பூன்
ரீபைண்டு ஆயில் - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
தயிர் - இருநூறு மி.லி
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்

செய்முறை :

முதலில் காரட்டை நன்கு கழுவி நைசாக துருவிக் கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய் நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும் கடுகு சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதங்கியதும் காரட், உப்பு சேர்க்கவும்.
அரை வேக்காடு வெந்ததும் இறக்கி தயிருடன் சேர்த்து கலக்கவும்.


குறிப்பு:

இந்த பச்சடி எந்த வகை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.