Showing posts with label இறால். Show all posts
Showing posts with label இறால். Show all posts

இறால் வறுவல்

தேவையான பொருட்கள்

இறால் - அரை கிலோ
பெ. வெங்காயம் - அரை கிலோ
மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
மி. பொடி - இரண்டு டீஸ்பூன்
இஞ்சி + பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
ரீபைன்டு ஆயில் - மூன்று டேபிள்ஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி+ பூண்டு விழுது, உப்பு தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி சோம்பு தாளித்து ஊற வைத்த இறாலை போட்டு வதக்க வேண்டும்.
அதுவே தானாக நீர்விட்டுக்கொள்ளும். எனவே நீர் ஊற்ற வேண்டாம்.
நீர் முழுவதும் வ்ற்றியதும் வெங்காயத்தை நீள நீளமாக அரிந்து இறாலில் போடவும்.
சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.


பரிமாறும் அளவு - ஐந்து நபர்களுக்கு
ஆயத்த நேரம் - இருபது நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்

இறால் குழம்பு

தேவையான பொருட்கள்

இறால் - அரை கிலோ
சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
உப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன்
எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - மூன்று கொத்து
தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டீ ஸ்பூன்

செய்முறை
இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.
தேங்காய் & சீரகத்தை அரைக்கவும்.
சோம்பை நன்றாக தட்டி வைக்கவும்.
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்கவும்.
இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளியை ஊற்றவும்.
ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

பரிமாறும் அளவு - ஆறு நபர்களுக்கு
ஆயத்த நேரம் - இருபது நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்