நெய்மீன் வறுவல்

தேவையான பொருட்கள்

நெய்மீன் - அரை கிலோ
மிளகாய் பொடி - இரண்டு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
பூண்டு - இரண்டு பல்
சி. வெங்காயம் - ஒன்று
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - முன்று கொத்து
எண்ணை - வறுக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் மீனை சுத்தம் செய்து அகலமான மெல்லிய துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
மி.பொடி, ம.பொடி, உப்பு, சோம்பு, சி.வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதைப் போட்டு மீன் துண்டங்களில் பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையை பரவலாகப் போட்டு அதன் மேலேயே மீன் துண்டங்களைப் பரப்பவும்.
இரண்டு பக்கமும் நன்கு சிவந்ததும் வெளியில் எடுத்து எண்ணை உறிஞ்சும் தாளில் சுற்றி தட்டில் எடுத்து வைக்கவும்.


பரிமாறும் அளவு - நான்கு நபர்களுக்கு
ஆயத்த நேரம் - பத்து நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - பத்து நிமிடங்கள்

0 comments: