சேமியா தயிர் கிச்சடி

தேவையான பொருட்கள் :

சேமியா - கால் கிலோ
தயிர் - அரை லிட்டர்
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
க. பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - கால் டீ ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - பத்து கிராம்
வெங்காயம் - ஒன்று
ப. மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
மல்லி இலை (நறுக்கியது) - இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
முந்திரியை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.
அரை லிட்டர் தண்ணிரை கொதிக்க வைத்து சேமியாவை போட்டு மூன்று நிமிடம் வேக வைத்து இறக்கி நீரை வடிக்கவும். மேலே இரண்டு டம்ளர் குளிந்த நீரை ஊற்றி வடிய விடவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் லேசாக பிறட்டிக் கொடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, க. பருப்பு, முந்திரி தாளித்து பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சேமியா, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கிண்டி அடுப்பை அணைக்கவும்.
பின் தயிர் சேர்த்து கிண்டி விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றி மேலே மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.


பரிமாறும் அளவு : நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம் :ஐந்து நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : பதினைந்து நிமிடங்கள்

1 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பேக்ரவுண்ட் கலரை மாற்றுங்களேன் ..ப்ளீஸ்.. வெளிர் நிறமாக..