நண்டு குருமா

தேவையான பொருட்கள்

நண்டு - ஒரு கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - இரண்டரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
அரைக்க:
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - ஒரு டீ ஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டீ ஸ்பூன்
மல்லி பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் - ஐந்து டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து இரண்டு துண்டுகளாக நடுவில் நறுக்கவும்.
அடுப்பில் வானலியை வைத்து அரை டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி அரைக்க வைத்துள்ளவற்றில் மிளகு, சீரகம், சோம்பு போட்டு வாசம் வர வறுத்து அடுப்பை சிம்மில் வைத்து பின் மல்லி பொடி, மிளகாய் பொடி சேர்த்து பிரட்டவும்.
தேங்காயை கடைசியாக போட்டு லேசாக வெதுப்பினால் போதும்.
இறக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி & பூண்டு விழுது சேர்க்கவும்.
வாசனை வந்ததும் தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் நண்டைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த விழுதை ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

பரிமாறும் அளவு - நான்கு நபர்களுக்கு
ஆயத்த நேரம் - பதினைந்து நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்

0 comments: