தயிர் வடை

தேவையான பொருட்கள் :

உளுந்து - கால் கிலோ
ப. அரிசி - ஐம்பது கிராம்
தயிர் - அரை லிட்டர்
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - அரை டீ ஸ்பூன்
ப. மிளகாய் - ஐந்து
மிளகு - பத்து
சீரகம் - அரை டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - நான்கு கொத்து
கொத்த மல்லி - மூன்று டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - ஒரு டீ ஸ்பூன்
உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
எண்ணெய் - அரை லிட்டர்

செய்முறை :

முதலில் உளுந்தையும், அரிசியையும் இருபது நிமிடம் ஊற வைக்கவும்.
தயிரை நன்றாக கடைந்து ஒரு ஸ்பூன் உப்பு, அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
ப. மிளகாய்களை சிறிதாக வெட்டி வைக்கவும்.
ஒரு ஸ்பூன் எண்ணையில் கடுகு & உளுந்து தாளித்து, பாதி மிளகாய், இரண்டு கொத்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் அடுப்பை அனைத்து விட்டு தயிரை ஊற்றி மூடி வைக்கவும்.
உளுந்து, அரிசியை கிரண்டரில் போட்டு அரைக்கவும். மாவு நன்றாக பொங்கி வந்ததும் உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வழிக்கவும்.
மாவில் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்துப் போடவும்.
மீதமுள்ள ப. மிளகாய்,கறிவேப்பிலை போடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊறி சூடாக்கவும். அடுப்பு மிதமான தீயில் எரிய வேண்டும்.
வடைகளை தட்டி போட்டு வெந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.
பிறகு வடைகளை தயிரில் போட்டு மல்லி இலைகளையும், சீரகப் பொடியும் தூவவும்.


குறிப்பு :
விருப்பமுள்ளவர்கள் பத்து சி. வெங்காயத்தை நறுக்கி மாவில் சேர்த்து வடைகளாக தட்டலாம்.

பரிமாறும் அளவு : எட்டு நபர்களுக்கு
ஆயத்த நேரம் : முப்பது நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : இருபது நிமிடங்கள்

0 comments: