காரட் தயிர் பச்சடி

தேவையான பொருட்கள்

காரட் - நான்கு
ப. மிளகாய் - மூன்று
பெ. வெங்காயம் - ஒன்று
கடுகு - சிறிது
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீ ஸ்பூன்
ரீபைண்டு ஆயில் - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
தயிர் - இருநூறு மி.லி
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்

செய்முறை :

முதலில் காரட்டை நன்கு கழுவி நைசாக துருவிக் கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய் நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும் கடுகு சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதங்கியதும் காரட், உப்பு சேர்க்கவும்.
அரை வேக்காடு வெந்ததும் இறக்கி தயிருடன் சேர்த்து கலக்கவும்.


குறிப்பு:

இந்த பச்சடி எந்த வகை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

2 comments:

Anonymous said...

அருமையான ஒரு செய்முறையுடன் ஆரம்பித்திருக்கின்றீர்கள்..வாழ்த்துகள்..தொடர்ந்து எங்களுடன் பயணிக்க வேண்டுகின்றோம்..

உங்க word verification எடுத்துவிட்டால் நல்லது

pudugaithendral said...

அருமையான ஒரு செய்முறையுடன் ஆரம்பித்திருக்கின்றீர்கள்..வாழ்த்துகள்..தொடர்ந்து எங்களுடன் பயணிக்க வேண்டுகின்றோம்..

உங்க word verification எடுத்துவிட்டால் நல்லது


repeatu.